Skip to content

இவன் தான் பாலா

‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பரமணிய பாரதியார்

இது நடந்தது 1999 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும்.ஒரு சனிக்கிழமை பிற்பகல் பொழுதில் பள்ளி நண்பர் மகேந்திரன் வீட்டில் திரைப்படம் பார்பதாக முடிவு செய்யப்பட்டது.அதுவும் CD playerயில்.முதல் முதலாக CD playerயில் படம் பார்க்கும் ஆர்வத்தில் நான் மிதி வண்டியை வேகமாக அழுத்தினேன்.காத்தவராயன் கோவில்,தேவர் சிலை கடந்து முன்சிப்கோர்ட் சாலை வழியாக மகேந்திரனின் வீட்டை அடைவதற்குள் நண்பர் யாவரும் கூடிவிட்டுருந்தார்கள்.தாமதமாக வந்த என்னை பார்த்து “நீ வருவதற்குள் ஒரு படமே பார்த்துவிடலாம்….”என்று சில நண்பர்கள் கோபப்பட….நண்பர் கார்த்திக்கண்ணன் “ஏன்டா வாயில்லா பூச்சிய கிண்டல் பன்றிங்க..” என்று எனக்கு ஆதரவாக பேசினார்.பிறகு அவருக்கே உரிதான வட்டார மொழியில் என்னை பார்த்து “நீ ஊன்டு சொல்லு மாப்ள …ரோட்ட உருட்டி வீட்டல வெச்சிருவோம்….”.

இதற்கிடையில் எந்த படம் முதலில் பார்களாம் என்பதில் சண்டை ஆரம்பமானது…Deep blue see,Titanic மற்றும் ஒரு தமிழ் படம் தான் Choice.எல்லோரும் Titanic என்று ஒரு மனதாக முடிவு செய்ய….ஒரே ஒரு நண்பர் மட்டும் அந்த தமிழ் படத்தை பார்களாம் என்று வாதாடினார்….தான் அந்த படத்தை மதுரை மினிப்பிரியா திரைஅரங்கில் நேற்று பார்த்தாகவும்….எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றும் கூறினார்.எல்லோரும் கடுமையாக எதிர்த்தாலும் நண்பர் விடுவதாக இல்லை…”பட ஆரம்பத்தில் ஒரு கானா பாடல் வருகிறது அதையாவது பார்க்கலாமே ?” என்று கூறினார்.அரை மனதாக எல்லோரும் சம்மதிக்க….படம் ஆரம்பமானது….கல்லூரி கதையாக இருந்தனாலும்,கதாநாயகனின்
புதிய தோற்றதாலும் நாங்கள் ஆர்வம் அடைந்தோம்….என்ன ஆச்சரியம் நண்பர்கள் “கேட் வின்சென்டை” மறந்து அந்த தமிழ் படத்தை பார்க்க தொடங்கினார்கள்..படத்தை தடையில்லாமல் முழுவதுமாக பார்த்தோம்.படம் முடிந்ததும் அறையில் ஒரு கனமான அமைதி நிலவியது.நண்பர்கள் சிலர் அந்த படத்தை பெரிய திரையில் மறுபடியும் பார்பதற்காக Maths Tution மறந்து மினிப்பிரியா நோக்கி படை எடுத்தார்கள்.
நான் இயக்குனர் யார் என்று கேட்டேன்….நண்பர் ஒருவர்…”யாரோ புது ஆளுப்பா..பேரு….பாலா”…இப்படித்தான் பாலா அண்ணனின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.(இயக்குனர் பாலா..எனக்கு அன்பாக பாலா அண்ணே..) அன்று நண்பர்களோடு நான் பார்த்த தமிழ் படம்..”சேது”.

மேல்குறிப்பிட்ட சேது பட அனுபவத்தை பாலா அண்ணனுக்கு மின்னஞ்சலாக ஒரு வருடம் முன்பு அனுப்பினேன்.பாலா அண்ணனும் நன்றி சொல்லி எனக்கு பதில் எழுதினார்.

சினிமா காரரின் வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இல்லை என்று சொல்பவர்களின் பேச்சை பொய் ஆக்கியது பாலா அண்ணனின் வாழ்க்கை.”இவன் தான் பாலா” தொடர் ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்தபோது நான் கல்லூரி இறுதி ஆண்டு மாணவன்.வளாக கலந்தாய்வில் (Campus interview) தேர்ச்சி பெறாமல் சோர்வாக இருந்த சமயம்.”இவன் தான் பாலா” ஒவ்வோர் வாரமும் படிக்க படிக்க என்னை மீறி எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது.வாத்தியார் பாலுமகேந்திரா அறிவுரைப்படி பாலாவுக்கு அதிகாலை ஐந்து மணிக்கு எழும் பழக்கம் வந்தது என்று குறிப்பிடப்படவே நானும் அதிகாலை ஐந்து மணிக்கு எழும் பழக்கத்தை மிக தீவிரமாக கடைபிடிக்க தொடங்கினேன்.அப்பாவின் வேலை காரணமாக சிறுவயதில் இருந்தே வீட்டில் அதிகாலை எழும் பழக்கம் இருந்தாலும் வளாக கலந்தாய்வு போன்ற முக்கிய தருணங்களில் அந்த நல்ல பழக்கத்தின் அவசியத்தை எனக்கு உணர்த்தியது பாலா அண்ணன்தான்.அதன் பின் வந்த இரண்டாவது கலந்தாய்விலேயே நான் தேர்ச்சி பெற்றதற்கு பாலா அண்ணனுக்கும் நிச்சயம் பங்கு இருக்கிறது.

(இந்த வரி எழுதியதும் “இவன் தான் பாலா” புத்தகத்தை 4 ஆவது முறையாக படித்து முடித்தேன்.160 பக்கங்களை ஒரே மூச்சில் படித்து முடித்த போது எப்போதும் போல புது இரத்தம் பாய்வதை போல் உணர்ந்தேன்).எப்போதும் போல இந்த வரிகளை படித்தபோது உணர்ச்சிபெருக்கில் என் கண்கள் களங்கின…

அண்ணன் பாலா சொல்வதை போல் இருக்கும் அந்த அற்புத வரிகள்….

“பெரும் போராட்டாமாக இருந்தது ஒவ்வோரு நாளும்.ஒரு வழியாக விநியோகஸ்தர்களையும் தியேட்டர் உரிமையாளர்களையும் கெஞ்சிக் கூத்தாடிப் “சேது” படத்தை ரிலீஸ் செய்துவிட்டோம்.முதல் நாள் சத்தமே இல்லை.ஊர் ஊராக தியேட்டர் தியேட்டராக ஓடினேன்…”ஒரு வாரம் பொறுமையாக இருங்க சார்… நிச்சயம் பிக்கப் ஆயிடும் சார்!”. என்று காலில் விழுந்து பிச்சை எடுக்காத குறை.யாரும் கேட்பதாக இல்லை.இரண்டு,மூன்று நாட்களில் படத்தை தூக்கிய தியேட்டர்களெல்லாம் உண்டு.

ஆனால் மறுவாரம் பத்திரிகை,டி.வி. விமர்சனங்கள் ‘சேது’வை தலையில் தூக்கிவைத்து கொண்டாடின.’50 மார்க்’ போட்டது விகடன்,சன் டி.வி. திரை விமர்சனத்தில் ‘குறிஞ்சி மலர்’ என புகழ்ந்தது.தியேட்டர்கள் திருவிழாக் களங்களாயின………..

…..மதுரை மினிப்பிரியாவுக்கு போயிருந்தேன்.செம கூட்டம் ! கூட்டத்தில் தலை கலைந்து,சட்டை கசங்கி,கசகசவென வியர்வை வழிய,டிக்கெட் வாங்க நின்றிருந்தார் என் அப்பா.”யே..அவரை உள்ள கூட்டிட்டுப் போலாம்” எனக் கிளம்பிய குட்டியப்புவை தடுத்தேன்.”வேணாம் விடுரா… நிக்கட்டும்.எங்கப்பனுக்கு அதான் சந்தோஷம்!” என்றேன்.கூட்டத்தில் என்னைப் பார்த்துவிட்ட அப்பா,அங்கிருந்தே கையாட்டிச் சிரித்தார்…குழந்தைபோல!

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அண்ணன் பாலா படித்து கொண்டிருந்தபோது நாஞ்சில்நாடன் எழுதிய சிறுகதை படித்ததுதான் அவர் வாழ்க்கையின் திருப்புமுனை என்ற கூற்று….நாஞ்சில்நாடனின் வாசகன் என்ற முறையிலே எனக்கு பெருமை.

பாலாவின் அடுத்த அடுத்த படங்களான “நந்தா”,”பிதாமகன்”,”நான் கடவுள்” போன்ற படங்கள் வேறு வேறு புதிய உலகத்தை அறிமுகம் செய்தன.பாலாவின் இந்த படைப்புகள் இல்லை என்றால் ஒரு மன நோயாளி ,நிராகரிக்கப்பட்டு ஜெயில்லுக்கு செல்லும் ஒரு குழந்தை குற்றவாளி,
பிச்சை காரர்கள்,மாற்று திறனாளிகள்,அகோரிகள் இவர்களின் வாழ்க்கை படம் ஆக்கபட்டிருக்காது.

இவர்களின் போன்றோரின் வாழ்க்கை படம் ஆக்கபட்டபிறகு,இதயம் இருக்கும் யாவரும் அப்படி பட்ட மனிதர்களை பார்த்தால் நிச்சயம் அவர்கள் மனது புண்படும் படி நடக்கமாட்டார்கள்.இதுதான் இயக்குனரின் வெற்றி.

இன்னோரு முக்கிய அம்சம் எவ்வளுதான் சீரியஸான கருத்தகளை சொன்னாலும் அதில் மெல்லிய காமடி நூல் நெய்வதில் பாலாவுக்கு நிகர் பாலாதான்.அது காமடி போல் தோன்றினாலும் ஒரு ஆழ்ந்த உள் அர்தம் அதில் இருக்கும்.எடுத்துகாட்டாக….”நான் கடவுள்” பிச்சைகாரர்களில் ஒருவர் (கவிஞர் விக்கிரமாயித்தன்) தங்களின் அடிமை வாழ்க்கையின் இயலாமையை அவர்களின் முதலாளி சொல்வதாக இப்படி கூறுகிறார்….

“நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள் ஆனால் வாய்தான் காது வரை நீள்கிறது”

அலுவலக நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக ஊத்தங்கரை சென்ற நான் “நான் கடவுள்” பார்பதற்காக திருவண்ணாமலை சென்றேன்.இரண்டாம் காட்சி படம் பார்த்துவிட்டு திரும்பும்போது அடுத்த நாள் அதிகாலை மணி இரண்டாகிவிட்டிருந்தது.திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து
பெங்களூர் வண்டி பிடித்தால் ஊத்தங்கரை சென்றடையலாம்.இடம் இல்லாததால் நின்று கொண்டே பயணம் மேற்கொண்ட நான் படத்தின் பாதிப்பால் ஊத்தங்கரை தாண்டியும் பயணம் செய்து கொண்டிருந்தேன்.நடத்துனர் ஊத்தங்கரை தாண்டிவிட்டதாக கூறவே….நான்
இறங்கி எதிர் திசையில் வேறு வண்டி பிடித்து ஊத்தங்கரை சென்றடைந்த போது அதிகாலை 4 மணி.

“நான் கடவுள்” பட விழாவுக்கு வந்த மணிரத்னம் “பாலாவின் ரசிகராக வந்திருக்கிறேன் ” என்று கூறினார்.

பாலாவின் சிஷ்ய கோடிகள் இயக்குனர் அமீர் ,இயக்குனர் சசி குமார் அவர்களின் படைப்புகளும் என்னை ஈர்கவே அவர்களும் எனக்கு அமீர் அண்ணே , சசி அண்ணே ஆனார்கள்.

இவர்களின் வெற்றிகளெல்லாம் நமக்கு சொல்லும் விஷயங்கள்….

(அமெரிக்க முதலாளிகளிடம் வாழ்க்கையை அடகு வைத்துவிட்ட இந்திய மென்பொருள் சமூகத்துக்கும் இது பொருந்தும்)

1) உங்களின் குடும்ப பிண்ணனியோ,கல்வி தகுதி நிச்சயம் உங்களின் முன்னேற்திற்கு தடையில்லை.பாலாவுக்கு அமெரிக்கன் கல்லூரியில் 25 அரியர்கள் இன்றும் இருக்கிறது. (இந்த எடுத்துகாட்டை தவறாக புரிந்து கொண்டு படிக்கவும் செய்யாமல்,உறுப்படியாக
எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமல் சுற்றி திரிபவர்களை காலம் மன்னிக்காது)

2) மாறுபட்டு சிந்திப்பது.

3) தோல்வி பற்றி கவலைபடாமல் புது முயற்ச்சிகளில் ஈடுபடுவது.

4) அயர்ச்சியில்லாத நேர்மையான உழைப்பு

பருத்திவீரன் படம் வெற்றி பெற்ற பின் அமீர் இப்படி சொன்னார்…

ஒருவருக்கு நீங்கள் எவ்வளுவு பெரிய உதவி வேண்டுமானால் செய்யலாம் பணம் தரலாம்,வீடு கட்டி கொடுக்கலாம்,ஏன் திருமணம் கூட செய்து வெய்கலாம் ஆனால் எல்லாவற்றை விட மிக சிறந்த உதவி “வாழ்க்கையின் மீது ஒருவருக்கு நம்பிக்கை வர செய்வது” .பருத்திவீரன் படம் வெற்றி மூலம் வாய்ப்பு தேடி கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் அந்த நம்பிக்கையை கொடுத்ததாக அமீர் கூறினார்.

அதே போன்ற நம்பிக்கைதான் எனக்கு “இவன் தான் பாலா “ புத்தகம் படிக்கும் போது கிடைத்தது.

Note :

பாலாவின் “அவன் இவன்” புதிய திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது.

Advertisements

ரஹ்மானுடன் நான் !

ARR Live Concert பார்க்க வேண்டும் என்று தீடிரென்று தோன்றவே முன் தின இரவு இனையத்தில் முன் பதிவு செய்தேன்.நண்பர்கள் யாரும் வர வில்லை என்று சொன்னதால் தனிமையிலே இனிமை காண முடிவு செய்தேன்.

Live Concert துவங்கும் நேரம் அடுத்த நாள் மாலை 7pm,ஆகவே அடுத்த நாள் மதியம் இரண்டு மணிக்கான புகை வண்டியில் பெங்களுர் செல்லவதாக திட்டம்.அடுத்த நாள் காலை எழுந்து விகடன் படித்து,குமுதம் மேய்ந்து,குளித்து கிளம்புவதற்குள் மதியம் ஆகிவிட்டுருந்துது.

நான் ஏறவும்,புகை வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.பிறகு பெங்களுர் வரயிலான நேரத்தில் The Foutain Headயில் மூழ்கி போனேன்.முன் வரிசையில் அமர்ந்து இருந்த யுவதி Harry porter படித்து கொண்டிருந்தார்.அவள் கூட வந்து இருந்த இளைஞன் தன்னுடைய கைபேசியின் பெரிய திரையில் Age of Empires விளையாண்டு கொண்டிருந்தான்.(எங்க ஊர் மாரியம்மன் கோயில் பொட்டலில் மஞ்சநத்தி மரத்தின் கொப்பு உடைத்து நான் “நாடு பிரிச்சு” விளையாண்டிருக்கிறேன்.
அதன் Silicon வடிவம் தான் Age of Empires).Harry porter படிப்பவர்கள் ஒரு முறை படித்த பின்பும் பல முறை திரும்ப திரும்ப படிப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன்.அந்த பெண்ணிடம் நீங்கள் எத்தனாவது முறை படிக்கிறீர்கள் என்று கேட்க தோன்றிய நான் அவள் நண்பனின் ‘கசன்கான்’ உடற்கட்டை பார்த்து என் ஆர்வத்தை அடக்கி கொண்டேன்.

(“கைப்புல்ல ஞயாத்து கிளமேலே சண்டைக்கு போரதுல்ல தெரியும்ல !” என்று வடிவேல் குரலில் ஒரு அசிரிரி ஒளித்தது)

பெங்களுர் புகை வண்டி நிலையத்தில் இறங்கிய போது பசி வயிற்றை கிள்ளியது.அங்கிருந்த ஒரு Sagarயில் மசால் தோசை சாப்பிட்டு பசி ஆரினேன்.மணி மாலை 5:00யை தாண்டவே….Auto எடுக்க முடிவு செய்தேன்.Auto Driver எப்போதும் போல சரியாக தப்பான இடத்தில் இறக்கி விட்டார்.அங்கிருந்த Security ஒருவரிடம் கன்னடத்தில்

“Palace Grounds Gateக்கு எப்படி போகனும் ?” என்று கேட்டன்

“Palace Groundsக்கு 14 Gate இருக்கு எந்த Gateக்கு போகனும் ?” இது Security

(அஅஅஅட்ட்ட்ட்ரா சக்கை அட்ராசக்கை அட்ராசக்கை அட்ராசக்கை எத்தன Gateறா சாமி…என்று கவுண்ட மணி குரலில் ஒரு அசிரிரி ஒளித்தது…)

“ARR Live Concertகாக” என்று சொன்னேன்….

அவருக்கு தெரியாது என்று கூறவே எனக்கு பதட்டம் அதிகரித்தது.

மணியை பார்தேன் 5:30pm…காலில் சூடு தண்ணி ஊத்தாத குறையாக சாலையை நோக்கி ஓட துவங்கினேன்.என்னை போலவே மற்றுமோர் Auto Driver ஆல்
பாதிக்க பட்ட ஒரு இளைஞர் கூட்டம் எனக்கு உதவ முன் வந்தது.

“Jaya Mahal” Palace grounds Gateக்கு போனால் ARR Live Concertக்கு உள் நுழையலாம் என்று சொன்னார்கள்.மற்றுமோர் Auto பிடித்து (வேறு வழி ?)
சரியான நுழைவுவாயில் சென்று ,2Km நடை பயணத்திற்கு பிறகு,மேடை காண கிடைத்தது. இனையத்தில் முன் பதிவு செய்த சீட்டை கொடுத்து Actual Ticketயை பெற பல குடிசைகள் இருந்தன.ஒவ்வோர் குடிசை முன்பும் சற்றே பெரிய வரிசை இருந்தது.அதில் ஓர் சிரிய வரிசையை தேர்தெடுத்து நின்றேன்.

பெங்களுர் குளிரை தாங்கும் விதமாக எங்கள் ஊர் கோயில் கொடையில் எனக்கு தலைபாகையாக கட்டிய சால்வை சகிதம் நான் இருக்க ,எனக்கு முன்பிருந்த யுவதிகள் Bondi Beachக்கு வெயில் கால விடுமுறைக்கு வந்ததை போல் இருந்தார்கள்.அந்த யுவதிகள் முறை வந்ததும் அவர்களின் கடன் அட்டை பரிசோதனைக்காக கேட்க பட ,கொண்டு வரவேண்டும் என்று தெரியாது என்று அவர்கள் கூற, அவர்களுக்கு அனுமதி மறுக்க பட, வாக்குவாதம் முற்றி ,சுற்றி இருப்பவர்களை பற்றி கவலை படாமல் ஆங்கிலத்தின் அந்த நான்கெழுத்து கெட்ட வார்த்தையை சத்தமாக கூறி கொண்டே அந்த யுவதிகள் வரிசையில் இருந்து நகர்ந்தார்கள்…

(“Morden Dressஅ பாத்து மயங்கிறாதீங்க இளைஞர்களே வாய தெறந்தா ஒரு மினி கூவமே வைச்சிருக்காளுக…”என்று விவேக் குரலில் ஒரு அசிரிரி ஒளித்தது)

வரிசையில் என் முறை வந்தும் குடிசையின் உள்ளே பார்த்தேன்.குடிசையின் உள் கட்டமைப்பு என்னை ஆச்சரியபடுத்தியது.ஒவ்வோர் வரிசைக்கும்
ஓர் மடிக்கணினி,ஓர் Thermal Printer,Tata Docomoவின் USB குச்சியின் வாயிலாக இனையம்…அவ்வளுதான்….wow What an Idea Sirji ?

அயல் நாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு இது என்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம்.ஆனால் மதுரையுடன் ஒப்பிடும் போது இது உண்மையில்
சிறந்தது தான்.சில சமயங்களில் இனையத்தில் முன் பதிவு செய்துவிட்டு மதுரை திரையரங்குகளில் என் Ticketயை உறுதி செய்ய நான் படும் பாடு
விஜயகாந்த் படத்தின் இறுதி காட்சியை போல மிக காமடியானது.

Actual Ticketயை பெற்று கொண்டு Concert நடக்க இருக்கும் திறந்த வெளி அரங்கின் உள் நுழையலாம் என்று முயன்றால்,என் பெரிய பையை பார்த்து விட்டு பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் என்னை ஓரம் கட்டியது.என்னை போல் பெரிய பையோடு சுற்றி திரிபவர்களெல்லாம் எப்போதும் பல முற்போக்கான திட்டதோடு இருப்பவர்கள் என்ற உண்மையை விளக்கி கர்நாடக போலீஸுக்கு யாரவது ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

கன்னடத்தில் ஒரு போலீஸ் கேட்டார்…

“பையில் என்ன ? ”

நான் : “Books” (ஆங்கிலம்….. தப்பிக்க சிறந்த வழி)

போலீஸ் : “பார்க்கலாமா ?”

நான் : “Yes ofcourse you can sir” (மீண்டும் ஆங்கிலம்….. தப்பிக்க வாய்ப்பு அதிகம்)

ஒரு போலீஸ் என் பையில் இருந்த “India Today”யின் அட்டை படத்தை பார்த்துவிட்டு மிரண்டு போய் தன் மேல் அதிகாரியை பார்க்க சென்றார்.அவர்கள் அட்டை படத்தை பார்த்து ஏதோ பேசி கொண்டிருந்தார்கள்.

நான் நொந்து கொண்டேன்…இந்த வாரம் பார்த்தா India Today Dawoodயின் படத்தை அட்டை படமாக போட வேண்டும் ? அதையும் நான் வாங்கி பையில் வைத்து கொள்ள வேண்டும் ….

துப்பறியும் சாம்பு போல் இருந்த மேல் அதிகாரி என் பக்கத்தில் வந்தார்.என்னை புரிந்து கொண்டவராக India Todayவை என்னிடம் கொடுத்துவிட்டு, வெளி உணவுகளுக்கு அனுமதி இல்லை என்று கூறி தண்ணி பாட்டிலையும் மற்றும் நான் மைசூரில் இருந்து கடத்தி வந்த கார சேவையும் வாங்கிகொண்டார்.

ஒரு வழியாக உள் செல்ல அனுமதி கிடைத்தது.மணி மாலை ஆறு …Live Concert தொடங்குவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தாலும் கிட்டதட்ட அனைவரும்
வந்து விட்டுருந்தார்கள்.மேடை மறைக்காத வன்னம் ஒரு மத்திய வரிசை நார்காலியில் அமர்ந்து கொண்டேன்.

நேரத்தை கடத்த India Todayயில் Dawoodயின் இந்திய நிழல் உலக சாம்ராஜ்யத்தை பற்றி படித்து கொண்டிருந்தேன்.பம்பாய் தெருக்களில் Dawoodயின் தம்பி Iqbal Qaskar மிக சாதராணமாக பானி பூரி சாப்பிடுவதாகவும்,மிக முக்கிய வழக்குகளில் அவன் பெயர் அடி பட்டாலும் ,இன்றளவும் தொடரும் அவனுது அத்து மீறல்களை தடுக்க போலீஸ் எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை என்றும் சாடியிருந்தார்கள்.

என் அருகில் ஒரு இளைஞன் வந்தமர்தான்.அவன் பெங்களுர் கல்லூரி ஒன்றில் ECE முதலாம் ஆண்டு படிப்பதாக கூறினான்.நான் Embedded மென்பொருள் எழுதுபவன் என்று தெரிந்ததும் சந்தோஷம் அடைந்து அவன் வீட்டில் முயற்ச்சித்து கொண்டிருக்கும் ஒரு Project பற்றி விளக்கினான்.நான் அவனுக்கு Microcontoller,Microprocessor,Cross compilation,NAND Flash,SDRAM என்று பாடம் எடுத்து கொண்டிருக்க மேடையில் ஒரு குட்டை பாவாடை பெண் தோன்றி குத்து விளக்கேற்ற கர்நாடக உள் துறை அமைச்சரை அழைத்தாள்.

பள்ளி,கல்லூரி நிகழ்ச்சிகளை போல மூக்கு கண்ணாடி அனிந்த பெண்கள் வந்து “மகா கணபதின்…மகாஆஆஆ கணபதின்” பாடி நிகழ்ச்சியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்…..

Duet படத்தின் “அஞ்சலி அஞ்சலி…” சாக்ஸபோன் இசையுடன் மேடை வெளித்துக்கு வந்தது.மேடையின் அலங்கார விளக்குகள் பிரம்மிக்க வைத்தன.மிக மிக மிக மிக பெரிய மேடை…இசை கலைஞர்கள் மேடையில் முன்பிருந்து பின்பாக உயரும் படிகளில் அமர்ந்திருந்தார்கள்….படிகள் தவிர்த்து மேடையின் முன்புறம் நிறையவே இடம் இருந்தது…படிகளுக்கு பின்புறம் சுவரில் மேடை முழுவதும் HD LED screens இருந்தது….இசைக்கு ஏற்றார் போல் அதில் Visuals மாறி கொண்டே
இருந்தன…..”அஞ்சலி ….” பாடலில் சாக்ஸபோன் இசை உச்சத்தை அடைந்த போது Visualsயில் வந்த மிக மிக உயரமான அருவியை பார்த்து நானும் ,அருகில் இருந்த கல்லூரி மாணவனும் ஒரே நேரத்தில் வாய் பிளந்தோம்…..

யாரும் எதிர்பார்காத ஒரு தருணத்தில் ரஹ்மான் மேடையில் தோன்றி “Iyuk Suraj Nikulatha….” என்று பாட துவங்கினார்….Visualsயில் பெங்களுரே தீ பிடித்ததை போல் உணர்வை ஏற்படுத்தினார்கள்….ரஹ்மான் மேடையின் நடுவே நிற்க நடன கலைஞர்கள் பாடலுக்கு ஏற்றார்போல் ஆடினார்கள்.நடன அசைவுகளில் கன கச்சிதம்.பாடலின் மத்தியில் ரஹ்மான் “Dilsereeeeee…” என்று உச்ச ஸாதாயில் பாடியபோது மேடை சுத்தி இருந்து தீ கிளம்பி வின்னை தொட்டது.

தொடர்ந்து ரஹ்மானே Guru படத்தில் இருந்து “Tere Bina Tere Bina Sajuna….” பாடினார். Visualயில் மதுரை நாயக்கர் மஹாலை காட்டினார்கள்.இசை கலைஞர்கள் எல்லோரும் நாயக்கர் மஹாலின் நடுவில் உட்கார்ந்து வாசிப்பதை போன்று உணர்தேன்.

ரஹ்மான் சென்று விடவே….வேருவோர் பாடகி வந்து எனக்கு புரியாத ஹிந்தி பாடல்களை பாடிகொண்டிருந்தார்.ஒலி அளவு கம்பியாக இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தவே எல்லோரும் “Volume…” “Volume…” “Volume..” என்று கத்தினார்கள்.அருகிலிருந்த ஒருவர்

“சரியா சொல்லுங்கப்பா….Volume அதிகமாயிருக்குன்னு குறைத்துவிட போகிறார்கள்……”

நல்ல வேளையாக Volumeயை உயர்தினார்கள் …சிவமணியின் Drums இப்போது நெஞ்சில் அதிர தொடங்கியது.

அடுத்த பாடலாக ….”Rangeela Re….” ஒலிக்கவே கூட்டத்தில் முதல் முறையாக சிலர் ஆட தொடங்கினார்கள்….பள்ளி நாட்களில் இருந்தே கேட்ட பாடல் என்பதால் நானும் மிகவும் ரசித்தேன்.

தீடென்று மேடையில் தோன்றிய பாடகர் கன்னடத்தில் பேசினார்…”Namaskara Benguluru Egedhira…?” ..(Hi Bangalore ..How are you ?)
அருகில் இருந்த கல்லூரி மாணவர் பாடகர் பெயர் ‘விஜய் பிரகாஷ்’ என்று கூறினார்.இவர்தான் ‘காதல் அனுக்கல்…’ பாடியவர் என்று சொன்னார்.விஜய் பிரகாஷ்
“ஏன் இதயம் …..” என்று Hosana பாடலை பாடினார்.மொழி கடந்து Hosana எல்லோராலும் வெகுவாக ரசிக்க பட்டது.

ரஹ்மான் “Jai ho…” என்று மறுபடியும் வந்தார்.அங்கிருந்த 10,000 பேரும்….ஒரே நேரத்தில் எழுந்து நின்று உணர்ச்சி பெருக்கில் ஆட துவங்கினார்கள்.
நான் நார்காலியின் மேல் நின்று ஆடி கொண்டிருந்தேன்.பாடல் முடிந்தும் வெகு நேரம் கைதட்டி கொண்டிருந்தார்கள்.எல்லோரும் முகத்திலும் கடவுளை
கண்ட பரவசம்.ரஹ்மான் “Thank you” “Thank you”…என்று மறுபடி மறுபடி கூறினார்.

ரஹ்மானே Bombay Dreamயில் இருந்து “போராலே…பொன்னுதாயி….” மெட்டில் இருக்கும் அந்த ஹிந்தி பாடலை பாடினார்.மறுபடியும் வேருவோர் பாடகி வந்து எனக்கு புரியாத ஹிந்தி பாடல்களை பாடினார்.

பின்னர் ரஹ்மான் Pianoவில் உட்கார்ந்தார்…மிக மிக பிரபலமான “Ish bina ya Jina Yaara…” பாடப்பவே …நான் வெகுவாக இரசித்தேன்….

பின்னர் ரஹ்மான் மற்றும் சிலர் ரமலான் தொழுகை உடையில் தோன்றி Bose படத்தில் இருந்து தொழுகை பாடலை தரையில் அமர்ந்து பாடினார்கள்.

Visuals…உண்மையில் அவர்கள் ஒரு Mosqueயில் உட்கார்ந்து பாடுவதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது….(This is the best Visual) மணி 9:30ஆகவே கூட்டம் சிற்றுண்டி கடைகளை நோக்கி மெல்ல நகர்ந்தது…

சற்று நேரத்தில் வந்திருந்த அத்தனை பாடகர்களும் மேடையில் தோன்ற ….மேடையின் அடியில் இருந்து ஒரு பாடகர் வந்து ….”Are you ready…?”…என்று
கேட்டுவிட்டு….”சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே….” பாட தொடங்கினார்….Melody பாடல்களால் அமைதியாக இருந்த கூட்டம் மீண்டும் உற்சாகமானது….தொடர்ந்து
அதே பாடகர் “பேட்ட ராப்….” பாட தொடங்க….தமிழ் கூட்டம் டப்பாங் குத்து ஆட தொடங்கினார்கள்.

அடுத்து ரஹ்மானும்,சிவமணியும் மேடையில் தோண்றினார்கள்….சிவமணி ஒரு Drumயின் மேல் ஏறி நின்று கொண்டு இரண்டு பெரிய தடிகளால் ஒலி
ஏற்படுத்தி கொண்டிருந்தார்.Raavan படத்தில் இருந்து “Kotta Killi..”ஹிந்தி பாடலுக்கு இது நடந்தது.

அடுத்து Mukkala ஹிந்தியில் இசைக்கப்பட்டது…

அதற்கடுத்தபடியாக …”இரும்பிலே ஒரு இதயம் ….” ரஹ்மான் பாட தொடங்க….அதே பாடலில் வரும் ஆங்கில வரிகளின் போது….பின் வரிசையில் இருந்த
கணவரோடு வந்திருந்த ஒரு பெண் குழந்தையை கணவரிடம் கொடுத்து விட்டு ஆட தொடங்கினார்.கணவரும் எழுந்து நின்று குழந்தையோடு ஆட தொடங்க
நான் ஒரு நிமிடம் மிரண்டே பேனேன்..

கடைசியாக “Hama Hama…” ஹிந்தியில் இசைக்கப்பட்டது…

ரஹ்மான் இங்கு இசைக்கபட்ட இசை யாவும் ஊழலுக்கு எதிரான நமது குரல் என்று கூறி நிகழ்ச்சியை முடித்தார்.

இசை புயலியின் தாக்கத்தில் இருந்து விடுபடமுடியால் நான் தேன் உண்ட வண்டாய் கிறங்கி போய் மைசூர் திரும்பினேன்….

Allah Rakha Rahman

ARR (Allah Rakha Rahman) இசை நிகழ்ச்சி இன்று மாலை பெங்களுரில் நடைபெறுகிறது.உலகத்தை Jai Ho என்று முழங்க வைத்தது ஒரு தமிழன் என்ற நினைப்பு பெருமையில் என்னை வானத்தில் மிதக்க வைக்கிறது.ARR இசையை கேட்கும் போதெல்லாம் வரும் ஒரு மந்தார மயக்கம் வார்த்தைகளால் கூற முடியாதது.எந்த ஒரு பாடலும் ஒரு புது அனுபவத்தை தருகிறது.

“போறாலே பொன்னுதாயி….” பாடலின் இசை Bombay Dreamsயில் இடம் பெற்று உலகம் எல்லாம் வரவேற்பு பெற்றது. அதே இசையை …”வெள்ளாமகாட்ட விட்டு தர மாட்டா பண்பாட கட்டி காக்கும் பட்டிகாட்டு கருதம்மா…” என்ற வரிகளில் கேட்க நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

The Time Magazine 2004 ஆம் ஆண்டு ARRயை The Mozart of Madras என்று புகழ்ந்தது.அந்த கட்டுரையை படிக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

The Mozart of Madras

18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த Wolfgang Amadeus Mozart உலகின் தலை சிறந்த இசை கலைஞர்களில் ஒருவர்.தன்னுடைய ஐந்து வயதில்
இருந்து keyboard,violin வாசித்த அவர் 17 ஆவது வயதில் அரசவை இசை கலைஞராக ஏற்று கொள்ள பட்டார்.அவருக்கு பின் வந்த Beethoven ஆரம்ப இசையில் கூட Mozartயின் சாயல் இருந்ததாம்.

அப்படிபட்ட Mozart டோடு ARRயை புகழ்ந்தது Time தந்த மிக பெறிய மரியாதை.

Youtube யில் மேய்ந்து கொண்டிருந்த போது ARRயின் 27வது வயதில் அவர் கொடுத்த பேட்டி கிடைத்தது.கடைசி Video வில் வரும் சிறுவன் யார் என்று பின்னூட்டம் இடுபவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது.

ஐந்து வயதில் ஆர்மோனியம் வாசித்தேன்….

Star TVயில் ARR,கவிஞர் வைரமுத்துவின் வாழ்த்து

Rahmanனை எனக்கு மிக சின்ன வயதில் இருந்தே தெரியும் – SPB

ஐம்பது வயதில் வரவேண்டிய முதிர்ச்சி ARR யிடம் இப்போதே இருக்கிறது : KB

முயற்ச்சி,பயிற்ச்சி,திட்டமிடல் , மக்களின் ரசனையை புரிந்து கொள்ளும் போக்கு….இவை ARRயின் வெற்றி இரகசியங்கள்….ARR புதிர் அல்ல சிறு வயதிலேயே
விளைந்த கதிர் – கவிஞர் வைரமுத்து

அவள்

அவள் :-குறுஞ்சி பூ – 2 :

பால்போல் சிரிப்பதில் பிள்ளை.. அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி..
கண்போல் வளர்ப்பதில் அன்னை.. கண்போல் வளர்ப்பதில் அன்னை..
அவள் கவிஞ்ஞன் ஆக்கினால் என்னை..

அழகர்சாமியின் குதிரை – திரை விமர்சனம்

ஒரு நல்ல சிறுகதையின் தலைப்பை போல் இருக்கும் இந்த தலைப்புதான் இந்த படத்தின் மீதான என் முதல் ஈர்ப்பு.எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் “அழகர்சாமியின் குதிரை” என்ற குறுநாவல் படமாக்க பட்டிருக்கிறது.”வெண்ணிலா கபடி குழு”,”நான் மகான் அல்ல” படங்களின் இயக்குனர் “சுசீந்தரன்” இயக்கிருக்கும் மூன்றாவது படம்.

கதை சுருக்கம் இதுதான்.கிராமத்தில் பஞ்சம்.பஞ்சத்தை போக்குவதற்கு கிராம தெய்வமான அழகர்சாமிக்கு கோலாகல திருவிழா எடுக்க வேண்டும் என்று முடிவாகிறது.தீடிரென்று அழகர்சாமி பவனி வரும் மண் குதிரை காணாமல் போகிறது.மண் குதிரையை கண்டுபிடிக்க ஒரு மலையாள கோடாங்கி கிராமத்திற்கு வருகிறார்.அவர் சொன்ன திசையில் , சொன்ன நாளில் குதிரை கிடைக்கிறது ஆனால் அது காணாமல் போன மண் குதிரையை அல்ல மாறாக ஒரு நிஜ குதிரை.கிராம தெய்வமான அழகர்சாமியே நிஜ குதிரையின் ரூபத்தில் வந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.இதற்கிடையில் நிஜ குதிரையின் சொந்தகாரர் அப்பு குட்டி வந்து குதிரையை திருப்பி கேட்கிறார்.கிராம மக்கள் தர மறுக்கிறார்கள்.அப்பு குட்டிக்கு தன்னுடைய குதிரை கிடைத்ததா ? கிராம திருவிழா நடந்ததா ? மண் குதிரை மாயமாக மறைந்ததன் காரணம் என்ன என்பது மீதி கதை.

ஒரு நல்ல கிராமத்து திருவிழாயை அனுபவித்த திருப்தியை இந்த படத்தின் மூலமாக கொடுத்தற்கு இயக்குனர் சுசீந்தரனுக்கு நன்றிகள்.

1982யில் நடப்பதை போல் தேனி பக்கம் இருக்கும் ஒரு கிராமத்து திருவிழாவை கண் முன் நிறுத்துகிறார்கள்…சிலோன் ரேடியோ,காவல் நிலையத்தில் இருக்கும் 1982 வருடத்து காலண்டர்,’அலைகள் ஓய்வதில்லை” திரைப்படம் என்று 1982 கால அனுபவத்தை கொடுக்க உண்மையாக உழைத்திருக்கிறார்கள்….

படத்தில் மற்றுமோர் சிறப்பம்சம் இளையராஜாவின் பிண்ணனி இசை.பிண்ணனி இசையே காட்சிக்கான உணர்ச்சிகளை புரிய வைத்து விடுகிறது.ரொம்ப நாள் களித்து இளையராஜாவின் மிரட்டும் பிண்ணனி இசை குறிப்பாக

1) அப்பு குட்டி , கிராம மக்கள் இடையே நடக்கும் சண்டை காட்சியின் போதான பிண்ணனி இசை
2) அப்பு குட்டியின் குதிரை கிராம தெருக்களில் ஓடும் போது வரும் பிண்ணனி இசை
3) சரண்யா மோகன் மலையில் ஓடி வரும்போது வரும் பிண்ணனி இசை

ஆனால் பாடல்களில் பழைய சாயல்.இளையராஜா குரலை மாத்தி பாடியது ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.(இளையராஜா குரலில் அமைந்த “தென்றல் வந்து தீண்டும் போது …..” போன்ற பழைய பாடல்கள் எவ்வளவு அருமை.”நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம் ….”பாடலை நான் தொடர்ந்து பல முறை கூட கேட்பேன்)

கதாநாயகன் என்று யாரும் இல்லை (அப்பு குட்டி கதாநாயகன் அல்ல).கிராமத்து கோடாங்கி,போலீஸ் இன்ஸ்பெக்டர்,தம்பிக்காக உணவை சேமிக்கும் சிறுவன்,நாத்திகம் பேசும் இளைஞர் கூட்டம்,ஊர் மைனர்,’புரோட்டா’ சூரி,மாமா மாமா என்று குழையும் Ex-President மகன்,கண்களில் கவிதை சொல்லும் கோடாங்கியின் மகள் (யாருப்பா இந்த பொண்ணு ? ஆள் சூப்பர் !) இப்படி எல்லோருமே கதாநாயகர்கள்தான்.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கதையோடு ஒன்றன கலந்து வரும் காமடி அருமை….(Complete movie comedy scenes are ORIGINAL).

அழகர்சாமியின் குதிரை எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல.நம் அடையாளங்களின் வேர்களை ஆவனபடுத்தியதற்காக போற்றி பாதுகாக்க வேண்டிய படம்.

2004 : விருமாண்டி
2007 : பருத்திவீரன்
2008 : சுப்பரமணியபுரம்
2009 : பசங்க,வெண்ணிலா கபடி குழு
2010 : மைனா
2011 : ஆடுகளம் , அழகர்சாமியின் குதிரை

இதை நல்ல படம் என்று நான் சொல்வதற்கு கீழ் கண்ட 4 காரணங்கள்

1) படத்தில் முடியை விரித்து “வாடாஆஆஆஆஆ” என்று கத்தும் நார்த் மெட்ராஸ் ரவுடிகள் இல்லை.
2) பஞ்ச் டயலாக் பேசும் கதாநாயகன் இல்லை.
3) குத்தாட்டம் போடுவதற்கு மட்டுமே வரும் கதாநாயகி இல்லை.
4) தீடிறென்று பாரீஸ் தெருக்களில் ஐஸ்கிரிம் சாப்பிட்டு கொண்டே கதாநாயகனும் , கதாநாயகியும் காதலிக்க ஆரம்பிக்கும் காமடி காதல் காட்சிகள் இல்லை (“எங்கேயும் காதல்” அபிமானிகள் என்னை மன்னியுங்கள்)

அட ஆம்பலின் விமர்சனத்தை விடுங்கப்பா இவங்க சொல்றத கேளுங்க

அழகர்சாமியின் குதிரை இரத்தமும் சதையுமாக மக்களின் வாழ்கையிருந்து எடுக்கபட்ட கதை” – இயக்குநர் பாலுமகேந்ரா

இயக்குநர் பாலுமகேந்ரின் வாழ்த்து….

இளையராஜாவின் வாழ்த்து….

இயக்குநர் பாண்டிராஜ்,இயக்குநர் சிம்பு தேவன்,இயக்குநர் சமுத்திரகனி,சசி அண்ணே (இயக்குநர் சசிகுமார்),
இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் வாழ்த்து (watch Vetrimaran’s stylish speech mixed with lot of English words hard to believe he has directed ADUKALAM with 100% perfection in Madurai slang.By the way Vetrimaran has done his Masters in English literature from Loyala)

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி,அப்பு குட்டி,சரண்யா மோகனின் வாழ்த்து….

என்றும் சுஜாதா

இந்த வலை பதிவில் எழுத்தாளர் சுஜாதா பற்றி சமிபத்தில் நான் அறிந்த கொண்ட இரண்டு செய்திகள்…

1) இன்றுள்ள இளம்வாசகருக்கு எழுத்தாளர் சுஜாதாவின் பன்முகத்தன்மையை அடையாளப்படுத்தும் விதமாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சுஜாதாவின் படைப்புகளில் இருந்து தேர்வு செய்து என்றும் சுஜாதா என்ற புத்தகம் ஒன்றினைத் தொகுத்திருக்கிறார்….மேலும் தெரிந்து கொள்ள இந்த சுட்டியை பாருங்கள்….

http://www.sramakrishnan.com/?p=2265

2) எழுத்தாளர் சுஜாதா பங்பெற்ற ‘சிகரம் தொட்ட மனிதர்கள்’ நிகழ்ச்சி விஜய் தொலைகாட்சியில் 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.அவர் கோபியுடன் பேசிய பகுதியின் காணொளி இணைப்பு இந்த சுட்டியில் இணைக்கப்பட்டுள்ளது.

http://vimeo.com/5037086

இந்த வயதிலும் உங்களால் துடிப்போடு இயங்குவதற்கு என்ன காரணம் ? என்ற கேள்விக்கு சுஜாதாவின் பதில் மிக மிக அருமை…

என் அன்பிர்கினிய , மரியாதைகுரிய எழுத்தாளர் சுஜாதாவை பற்றி விரிவான வலை பதிவு மற்றோர் சமயத்தில்….

குறுஞ்சி பூக்கள்

பழைய பாடல்கள் மீது பாசம் எனக்கு ….பழைய பாடல்களின் நல்ல வரிகளின் அறிமுகம் கிடைத்தது லியோனியின் பட்டிமன்றகளில்தான்….கோடை பண்பலையில் “குறுஞ்சி பூக்கள்”, ஹலோ பண்பலையில் “ஹலோ கிராம்போன்”,ஜெயா தொலைகாட்சியில் “தேன் கிண்ணம்” போன்ற பழைய பாடல்களின் நிகழ்ச்சிக்களின் பெயர்கள் பாடல்களுக்கு நிகராக என்னை மிகவும் கவர்கின்றன.

“குறுஞ்சி பூக்கள்” என்ற வகுப்பின் மூலமாக என்னை கவர்ந்த பழைய பாடல்களின் வரிகளை பதிவு செய்ய உள்ளேன்….

பாடல் ஆசிரியரின் பெயர் ,இசையமைபாளரின் பெயர், படத்தின் பெயர் எனக்கு தெரிந்திருப்பது மிகவும் கடினம்…….உங்ளுக்கு தெரிந்தால் பிண்ணூட்டமிடுங்கள்……

கானல் நீர் :-குறுஞ்சி பூ – 1 :

இது PBSயின் மிக மிக பிரபலமான பாடல்… எழுதியவர்,இசை யாரென்று தெரிந்தால் பிண்ணூட்டமிடுங்கள்……

கடமையே கண்ணாக இருக்கும் ஒரு வீரன் ,இன்னும் காதல் வயப்படாதவன்….பாடுகிறான்

வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது…
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது…
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலர் அன்றோ ?
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலர் அன்றோ ?

காதலின் பெருமையை உணர்ந்த ஒரு இராஜகுமாரி…பாடுகிறாள்..

மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும்….
பஞ்சனை சுகமும், பால் பழமும், படையும்,குடையும் சேவகரும்…
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ…..