பொருளடக்கத்திற்கு தாவுக

குறுந்தொகை : கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

ஜனவரி 27, 2011

27.பாலை – தலைவி கூற்றூ

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

யாருக்கும் பயனிலை :

கன்றும் உண்ணாமல் கறக்வும் கறக்காமல்
நிலத்தில் வழியும் பசுவின் பால் போல
எனக்கும் இல்லாமல்
என் தலைவனுக்கும் உதவாமல்
என் அழகு வீணாகிறகது.

நன்றி : எழுத்தாளர் சுஜாதா (Book : 401 காதல் கவிதைகள் -குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்,உயிற்மை பதிப்பகம்)

2 பின்னூட்டங்கள்
  1. என் சுவாசக் காற்றே படத்தின் “தீண்டாய் மெய் தீண்டாய்” பாடலுக்கு முன்னால் வரும் இந்த கவிதை குறுந்தொகை பாடலென்றும், அதன் பொருளை அறியத் தந்தமைக்கும் நன்றி!
    நிறைய பேரை சென்றடைய, தமிழ் மணத்தில் இணையுங்கள்!

பின்னூட்டமொன்றை இடுக