பொருளடக்கத்திற்கு தாவுக

வானம் – திரை விமர்சனம்

மே 2, 2011

சிம்பு படம் என்று ஒரு வித சலிப்போடு தியேட்டருக்குள் நுழைந்தால்…..என்ன ஆச்சரியம்…
நல்ல கதை அம்சம் கொண்ட படத்தில் சிம்பு ! ….தெலுங்கு படத்தின் தழுவலாக இருந்தாலும்
தங்களின் முக்கியத்துவம் குறைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த சிம்பு மற்றும்
பரத்துக்கு பாராட்டுக்கள்….

ஐந்து வெவ்வேறு தளங்களில் நடக்கும் கதைகள் கடைசியில் ஒரு புள்ளியில் இணைகின்றன.

பணக்கார காதலியிடம் தானும் ஒரு பெரிய பணக்காரன் என்று பொய் சொல்லும் ஒரு சென்னை குப்பத்து வாசி (சிம்பு), ஒரு இசை குழு ஆரம்பிப்பதை லட்சியமாக கொண்ட பெங்களூரை சேர்ந்த ஒரு இளைஞர் கூட்டம் (பரத்,வேகா),ஆந்திராவை சேர்ந்த ஒரு விலை மகள் (அனுஷ்கா),கோயமத்தூரை சேர்ந்த ஒரு நடுத்தர வர்கத்து முஸ்லீம் தம்பதி (பிராகாஷ்ராஜ்,சோனியா அகர்வால்),கந்து வட்டி கொடுமையில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஒரு குடும்பம் (சரண்யா)

இவர்கள் எல்லோருக்கும் ஒவ்வோரு பிரச்சனை…பிரச்சனையின் உச்சமாக எல்லோரும் சென்னைக்கு தனி தனியாக வரும் சூழ்நிலை ஏற்படுகிறது…எந்த சூழ்நிலையில் எல்லோரும் இணைகிறார்கள் ? சென்னையில் என்ன நடந்தது ? என்பது மீதி கதை…..

சற்று வித்தியாசமான கதை…ஐந்து கதைகள் மாற்றி மாற்றி காண்பிக்கபட்டாலும் ..கதை மெதுவாக நகர்வதை போன்ற உணர்வை தடுக்க முடியவில்லை…

சிம்பு,சந்தானத்தின் காமடி அவ்வளவு சிறப்பாக இல்லை.கணேஷ் (வி.தா.வ… புகழ்) வரும் காட்சிகளில் மட்டும் கலகலப்பு கூடுகிறது.சிம்பு தான் ஒரு நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூப்பித்திருக்கிறார்.கடைசி காட்சிகளில் குற்ற உணர்வில் தவிக்கும் காட்சிகள் சிம்புவின் நடிப்பு வெகு அற்புதம்.

பரத்,வேகாவிற்கு அவ்வளவாக நடிக்க வாய்ப்பு இல்லை.எனக்கு என்னவோ வேகாவை ‘சோப்பி கண்ணு’ ஆக பார்க்கதான் பிடித்திருக்கிறது.

ஒரு சாமான்ய முஸ்லீமை தன் அபார நடிப்பினால் கண் முன் நிறுத்துகிறார் பிராகாஷ்ராஜ்.அப்பாவியாக அவர் தவிக்கும் காட்சிகள் ஆகட்டும்,கடைசியில் உணச்சிகரமான காட்சிகள் ஆகட்டும் பிராகாஷ்ராஜின் நடிப்பு வெகு அற்புதம்.

அனுஷ்கா பெரும்பாலும் கிளாமர் வலம் வந்தாலும் ,நடிக்க வாய்ப்பு இருந்த காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிகிறார்.

சரண்யா எப்போதும் போல அழுது கொண்டே இருக்கிறார்…

திருநங்கை களை புண்படுத்தும் காமடி காட்சிகளை தவிர்பதற்கு இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடூரமான தீவிரவாதியை பாதுகாக்க கதவை திறந்து வைத்து கொண்டு இரண்டு போலீஸ் மட்டும் இருப்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்…

திரைகதையில் இன்னும் விறுவிறுப்பு கூட்டி இருந்தால் ‘வானம்’ இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்….

மீண்டும் அதே கேள்வி ஏன் படத்திற்க்கு ‘வானம்’ என்று பெயர் வைத்தார்கள்…..யாருக்காவது தெரிந்தால் பிண்ணூட்டமிடுங்கள்……

4 பின்னூட்டங்கள்
  1. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் நண்பரே..
    vaithee.co.cc

  2. Raja permalink

    in my point of view..

    from the view of Sky(high place)
    we can view all type of people

    JUST A FILM WITH BROAD VIEW.(BUT LITTLE BIT POOR SCREENPLAY)

பின்னூட்டமொன்றை இடுக