பொருளடக்கத்திற்கு தாவுக

கெண்டக்கி வறுத்த கோழி – KFC

மே 9, 2011

நெடு நாட்களுக்கு பிறகு சென்னையில் வார இறுதியை களிக்கும் வாய்ப்பு கிடைத்தது …..ஒரு சாகச பயணமாக பெங்களூரில் இருந்து அதிகாலை மூன்று மணிக்கு கிளம்பி நண்பகல் பனிரெண்டு மணிக்கு சென்னை சென்றடைதேன் (உபயம் : அதி விரைவு SETC) …சித்திரை மாதத்து வெயில் என்னை சிரிப்போடு வரவேற்றது …கோயம்பேடில் இருந்து நண்பரின் வீட்டுக்கு பயணநேரம் 30 நிமிடங்கள் என்று நடத்துனர் கூறியதும் என்னுடைய செல்பேசியில் பண்பலை கேட்க தொடங்கினேன் …ரேடியோ மிர்ச்சியில் “இது செம HOT மச்சி ” என்று கூறியது எனக்கு இது சென்னை பற்றிய வாசகம் என்று தோன்றியது….

மாலையில் நண்பருடைய DISCOVER இல் மற்றுமோர் சாகச பயணமாக வாகன நெரிசலில் மிதந்து KK நகர் சென்றடைந்தோம்.அங்கிருந்து மற்றுமோர் நண்பருடைய CAR இல் ஒரு SHOPING MALL க்கு சென்றோம். பெரும்பாலும் வடக்கிந்தியர்களே காண கிடைத்தார்கள்.

நண்பர்கள் வாங்க வேண்டியதியெல்லாம் வாங்கிய பிறகு ஏதாவது சாப்பிடலாம் என்று நினைத்த தருணத்தில் “கெண்டக்கி வறுத்த கோழி” கடை கண்ணில் பட்டது.வந்த நண்பர்களில் ஒருவர் “கெண்டக்கி வறுத்த கோழி” இதுவரை சாப்பிட்டதில்லை என்று தெரிந்ததும் அவருக்கு கெண்டக்கி வறுத்த கோழியை அறிமுகம் செய்யலாம் என்று முடிவு செய்யபட்டது.கடையில் கூட்டம் பயங்கரமாக இருந்தது.வண்ண தொலைக்காட்சி பெட்டியை போல கெண்டக்கி வறுத்த கோழியையும் தமிழக அரசு இலவசமாக கொடுக்கிறதா என்ன ?

வரிசையில் நான் நின்றேன் …கையில் சுஜாதாவின் “ஏன் எதற்கு எப்படி ” புத்தகம்.சூழ்நிலையின் சத்தத்தினால் என்னால் படிக்க முடியவில்லை.கோழி இயறைச்சியின் அறிமுகம் எனக்கு எப்போது கிடைத்தது என்று யோசிக்கலானேன்…சிறுவதிலிருந்தே அதிகம் இறைச்சி சாப்பிடும் பழக்கம் இல்லை .ஆட்டு இறைச்சி சற்று Heavy ஆன உணவாக இருப்பதால்….வீட்டில் பெரும்பாலும் கோழி இறைச்சி சாப்பிடுவோம்.அம்மா செய்யும் கோழி குளம்பு / வறுவல் ஒரு தனி ஸ்டைல் …நான் இது வரை எந்த உணவகத்திலும் எங்கும் அப்படி ருசியாக சாப்பிடதில்லை.

சிறுவனாக இருந்தபோது பொங்கலுக்கு மறுநாள் கோழி இறைச்சி வாங்க எங்கள் ஊர் மார்கட்டில் மீன் கடை தெருவில் இருந்த ஒரு கோழி கடையில் நீண்ட வரிசையில் நின்றுக்கிறேன்.இப்போதெல்லாம் தெருவுக்கு ஒரு இறைச்சி கடை வந்து விட்டது.பின்பு ஒரு முறை நண்பனோடு குற்றாலம் சென்றபோது செங்கோட்டை பார்டரில் “ரஹ்மத்” என்ற உணவகத்தில் மெளகு போட்ட நாட்டு கோழி வறுவல் மிக அற்புதமாக இருந்தது. வாழ்நாளில்
ஒருவர் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவகங்களில் ஒன்று “ரஹ்மத்”.

கல்லூரியின் ஒவ்வொரு சுதந்திர இரவின் (வாரம் ஒரு முறை சனிக்கிழமை வரும் Free night) போதும் கோழி இறைச்சி இல்லாமல் சாப்பிட்டதாக நினைவில்லை.திடீரென்று lolipop சிக்கன் , Drum சிக்கன்,இதயம் சிக்கன்,Butter சிக்கன் ,Grill சிக்கன் எல்லாம் அறிமுகமாயின.நண்பர் பேபி (அன்பாக அருண்) முழு கோழியை சாப்பிட்டு விட்டு நம்பியார் சிரிப்போடு “very tasty” என்பார்.நண்பர் SAM (அன்பாக கோழி) உணவகம் நடத்தியது எங்களுக்கு மேலும் வசதி.சிவகாசி என்றால் “அப்பன்ஸ்” …விருதுநகர் என்றால் “பர்மா கடை” என்று ஊருக்கு ஓர் கடை இருந்தது.

விதிவிலக்காக நண்பர் புன்னைவனம் (அன்பாக “புன்னை மாமா”) போன்ற சைவ பூச்சிகளுடன் சென்றால் மட்டும் சைவம் சாப்பிடுவோம்.அதிலும் புன்னை மாமா தேங்காய் சட்னி இல்லை என்றால் கோர்டுக்கு போய்விடுவார்.எந்த கடையாக இருந்தாலும் தேங்காய் சட்னி இருக்கா என்று கேட்டுவிட்டுதான் உள் நுழைவார்.

சமைக்க பழகிய பின் ஒரு நாள் அலுவலக நண்பர்களுக்கு நாட்டு கோழி குளம்பு சமைத்து கொடுத்தேன்.அயர்லாந்தில் இருந்த நாட்களில் தினம் தினம் கெண்டக்கி வறுத்த கோழி சாப்பிட்டேன் .கடும் குளிரில் தாக்கு பிடிக்க கெண்டக்கி வறுத்த கோழி தேவையாக இருந்தது.Belfastயில் நான் தினம் செல்லும்
கெண்டக்கி வறுத்த கோழி கடையில் வேலை செய்த சீனர்கள் (மாணவர்களாக இருக்க வேண்டும்)நெடுநாள் பழகிய நண்பர்கள் போல் ஆகிவிட்டார்கள்.

கோழி இறைச்சியுடனான என்னுடைய Autograph யை “Hello Uncle….” என்ற குரல் கலைத்தது.

ஒரு சிறுவன் பக்கத்தில் இருந்தான்….

சிறுவன் : “Hello uncle” என் கையில் இருக்கும் “ஏன் எதற்கு எப்படி ” புத்தகத்தை பார்த்து கொண்டே…

நான் : “Hello…”

சிறுவன் : “You like Writer Sujatha”

நான் : “ஆமா எனக்கு எழுத்தாளர் சுஜாதாவை பிடிக்கும்”

சிறுவன் : “I like him very much for his science fiction stories
Where did you bought this ? Odyssey ?
How much is this ?

நான் : “ஆம் Odysseyயில் தான் வாங்கினேன் …விலை Rs.140″

சிறுவன் :”It’s very costly….I will have to wait for next book exhibition”

நான் (மனதுக்குள்) : கெண்டக்கி வறுத்த கோழி கடையில் Rs.80 கொடுத்து நீ வாங்கும்
pop corn Chickenனின் விலை அதிகமாக தெரியவில்லை….(!)

சிறுவன் வரிசயை மீறி முன்னேற முயற்சிக்க….பின்னால் இருந்த இளைஞர் ..அவன்
தோளை பிடித்து ….”ஏய் STOP” கவுண்டமணி Styleயில் சொன்னார்.

இளைஞர் : “எத்தனாவது Standard படிக்கிறாய்…?”

சிறுவன் : “Seventh Standard”

இளைஞர் : “நீ தமிழில் பேசவே மாட்டியா ?”

சிறுவன் : “பேசுவேன்…” .

இளைஞர் : “ஏழாம் வகுப்பில் இருக்கும் நீ வரிசையில் வராமல் வரிசயை மீறுவது சரியில்லை”

சிறுவன் : I was already in the Queue.Just went outside to Drink some water.

இளைஞர் : சரி முன்னால் போப்பா….உன் English எங்களுக்கு வேண்டாம்…..

இளைஞர் கெண்டக்கி வறுத்த கோழியை உலகம் பூரா Famous ஆக்க அதன் உரிமையாளர்
எப்படி பாடு பட்டார் என்பதை சொன்னார்…..

KFCயின் விரிவான வரலாறுக்கு இந்த உரலியை பாருங்கள்…..

http://www.inspirationallane.com/InspirationalShortStories3.htm

நாம் இட்லி , தோசயயை “கெண்டக்கி வறுத்த கோழியை” போல் பிரபலம் செய்ய தவறிவிட்டோம் என்று இளைஞர் வருத்த பட்டார்….என்னுடயை முறை வந்தவுடன் கோழியை வாங்கிவிட்டு நண்பர்கள் இருந்த இடத்துக்கு சென்றேன்.வழியில் சிறுவன் (வரிசையில் பார்த்த அதே சிறுவன்) தன் பெற்றோரிடம் “Actually what happened in the Queue was ..” என்று ஏதோ சொல்லி கொண்டிருத்தான்…..

14 பின்னூட்டங்கள்
    • முத்து அண்ணா போன்ற சிறந்த எழுத்தாளர்கள் என்னை போன்ற கடை குட்டிகளை படித்து ,வாழ்த்துவது சந்தோஷம்…..நீங்கள் பதிவுகளை குறைத்து கொண்டது மிகுந்த வருத்தம்….

      “காவியங்கள் உனை பாட காத்திருக்க …. காக்கிநாடா (தெலுங்கு படம் பார்ப்பது) பக்கம் நீ போகலாமா ?”…..

  1. புன்னைவனம் permalink

    நல்ல வேளை!! நீர் கோழியைப் பற்றி மட்டுமே பேசாமலிருந்தீர்….நான் சட்னிக்காக கோர்ட் போவேன் என்று சொல்வதெல்லாம் ‘சும்மா’.

    இந்தியன் உணவு வகைகள் பெரும்பாலும் பிரபலமாகவே உள்ளது…ஏன் கே‌.எஃப்‌.சி பார்த்து நாம் சிறுமை பாடுகிறோம் என்று புரியவில்லை. இது ஒரு தேசிய பிரச்சினை., நம்மை சிறுமையாய் நினைப்பது.

    அந்த சிறுவன் பேபி போன்ற ஒரு இனமாகதான் இருக்கவேண்டும்.. இல்லை என்றால் கோழி திண்பதற்க்கு 80 ரூபாய் தர மாட்டான்… (சிரிப்பு)….

  2. “இது ஒரு தேசிய பிரச்சினை., நம்மை சிறுமையாய் நினைப்பது” என்ற உன்னுடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன்….

  3. A.R Mahendra permalink

    Super

  4. அசைவம் என்றால் பிரியர்கள், சைவம் என்றால் பூச்சிகளா ? – என்ன கொடுமை சார் இது ?
    ஒரே ஒரு டவுட்டு … இந்த கெண்டக்கி அப்டீன்னா என்னா?

  5. Mr.Harland Sanders originated Kentucky Fried Chicken at his service station in Corbin, Kentucky, though the first franchised KFC was located in South Salt Lake City, Utah.

    “Kentucky” is a state located in the East Central United States of America.

  6. புன்னைவனம் permalink

    எப்பொழுது நமது குற்றால அனுபவங்கள் எழுதப்படும்? ஆர்வமுடன் காதிருக்கிறோம். …

    அருணன் – புவனேஷ் கிளைக்கதை மிகவும் சுவாரஸ்யமானது…அது மட்டுமல்லாது கல்லூரி அனுபவங்களை மாதம் ஒரு பிளாக் ஆக எழுத கேட்டுக்கொள்கிறேன்.

  7. புன்னைவனம் permalink

    இரண்டாம் வருடம் என்றே நினைக்கிறேன். தண்ணீர்மலை ரூமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

    அன்றைய இரவில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ‘ஏ’ செக்ஷுன் இருக்கும் என்றே நினைக்கிறேன். அந்த நாளில் நாம் அடித்த கதைகள் அடுத்த 3 வருடங்களுக்கு அஸ்திவாரம் போட்டு கொடுத்தது.

    இன்று அதை வாழவேண்டும் என்று ஏகத்துக்கும் ஏங்குகிறேன். அட் லீஸ்ட் அதை அசைபோடவாவது வேண்டும்.

  8. மு.சதீஷ் permalink

    ஏய் நல்லா கதை சொல்ற Man…

  9. NishathKumaran permalink

    Pravin,

    Nee yen mutton sapida matenkirathu enaku theriyum, eepidi paublica poi solratha konjam avoid pannu 🙂

    /Nishath

  10. NishathKumaran permalink

    Any how its good one da , these things remembers me the day on which we framed the initial story for the magazine…… its really gr8, mudincha atha upload pannu, hope many of us will get a chance to read it besides their busy schedule…..

  11. Rajasekaran permalink

    Nice One Pravin

பின்னூட்டமொன்றை இடுக